பதிவு செய்த நாள்
07
மார்
2013
10:03
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா வரும் 10ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். உமாநாத தீட்சிதர் தலைமை தாங்குகிறார். கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் ஆனந்த தாண்டவ தீட்சிதர் வரவேற்கிறார். அரசு கலை பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் ஜவகர் நாட்டியாஞ்சலி விழாவை துவக்கி வைத்து பேசுகிறார். என்.எல்.சி., சேர்மேன் சுரேந்தர் மோகன், தொழிலதிபர் பாரத் பிஸ், நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.சாமி, விழாக் குழு தலைவர் நடராஜன், செயலர் வழக்கறிஞர் சம்மந்தம், செயலர்கள் டாக்டர் நாகசாமி, பொருளாளர் ராமநாதன், சாமிநாதன், ராமலிங்கம், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா கமிட்டி நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் சிதம்பரம் நகர பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.