காரைக்கால்: திருநள்ளார் நளநாராயணபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் துவங்கியது.காரைக்கால் திருநள்ளார் நளநாராயண பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றதுடன் துவங்கியது. மாலை யாகசாலை ஹோமம் முடிந்து சூரிய பிரபையில் பெருமாள் வீதி உலா நடந்தது. நேற்று திருமஞ்சனம் சாற்றுமுறை முடிந்து ஹம்ச வாகனத்தில் நாச்சியார் கோலத்தில் சாமி வீதி உலா நடந்தது.இன்று, 7ம் தேதி சேஷ வாகனத்திலும், நாளை கருடசேவையும் நடக்கிறது. 9ம் தேதி தேர் தீர்த்தவாரி, மாலை 3 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜ வீராசாமி செய்து வருகிறார்.