பதிவு செய்த நாள்
07
மார்
2013
10:03
ஓம் ஸ்ரீநாகசக்தி அம்மன் கோவிலில், குடும்பநல சிவசக்தி மகாவேள்வி வரும் 10ம் தேதி நடக்கிறது. கோவை - சிறுவாணி மெயின்ரோடு, ஆலாந்துறையில் ராகு,கேது பகவான்களுடன் ஓம்ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் உடனமர் ஓம்ஸ்ரீநாகசக்தி அம்மன் சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில், மகாசிவராத்திரிவிழாவையொட்டி, 108 யாக குண்டங்களில் குடும்பநல சிவசக்தி மகா வேள்வி நடக்கிறது. விழா வரும் 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு அபிஷேக அலங்காரத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு, குடும்ப ஆரோக்கியம், மழைவேண்டியும், துன்பம் நீங்கி, தொழில்வளம் பெருகவேண்டியும், தனித்தனியாக 108 யாக குண்டங்களில் குடும்பநல சிவசக்தி மகாவேள்வி நடக்கிறது. தொடர்ந்து, விடிய, விடிய பரதநாட்டியம், பக்தி கிராமிய நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சி, நள்ளிரவு பாட்டுமன்றம், அதிகாலை 4.00 மணிக்கு தமிழர் வீரவிளையாட்டு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும், குடும்பநல வேள்வியில் பங்குபெற விரும்பும் பக்தர்கள் 95667 26756, 96291 52185 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். விழா ஏற்பாடுகளை, ஓம்ஸ்ரீ நாகசக்தி மையம் செய்து வருகிறது.