அய்யர்மலை கிரிவல பாதை செப்பனிட முதல்வருக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 10:03
குளித்தலை: அய்யர்மலை ரெத்தினகீரிஸ்வரர் கோவில் கிரிவல பாதையை செப்பனிடக்கோரி, ஆன்மீக அறக்கட்டளை சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகீரிஸ்வரர் கோவில் உள்ளது. இதில் நான்கு கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையும் உள்ளது. வெள்ளிக்கிழமை, சோமவார நாட்கள், அமாவாசை மற்றும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். பொதுமக்கள் கோரிக்கையின்படி, கிரிவலபாதையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கரூர்-திருச்சி இருவழிசாலை மற்றும் நான்கு வழிச்சாலைக்கு தேவையான கட்டுமான பொருட்களை, கிரிவல பாதை வழியாக கொண்டு செல்கின்றனர். இதனால் கிரிவல பாதை குண்டும், குழியுமாக மாறி விட்டது. பக்தர்கள் நடமாட முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். சில பக்தர்கள் கிரிவல வேண்டுதலை முழுமையாக பூர்த்தி செய்யாமல், பாதியில் திரும்பி விடுகின்றனர். எனவே, பக்தர்கள் வசதிக்காக ரெத்தினகீரிஸ்வரர் கோவில் கிரிவல பாதை யை புதுப்பித்து தர வேண்டும்.