திருக்கோவிலூர்: கடலூர் தீர்த்தவாரியில் கலந்து கொண்ட திருக்கோவிலூர் ஸ்ரீதேகளீச பெருமாள் மனவாள மாமுனிகள் எதிர்கொண்டு அழைக்க ஆஸ்தானம் எழுந்தருளினார். திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் உற்சவ மூர்த்தியான ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், கடலூர் தேவனாம்பட்டினம் கடற் கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் கலந்து கொண்டார். பின்னர் நேற்று முன்தினம் திருக்கோவிலூர் வந்தடைந்தார்.இரவு 9 மணிக்கு பெரிய கோபுரத்தில் மன வாள மாமுனிகள் பெருமாளை எதிர்கொண்டு அழைக்க, சிறப்பு மேள தாளங்களுடன் ஆஸ்தாம் வாகன மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.நேற்று காலை 9.30 மணிக்கு மகா சாந்தி ஹோமங்கள், சிறப்பு திருமஞ்சனம், நான்காயிர திவ்யபிரபந்தம், அலங்காரம், தீபாராதனை முடிந்து மூலஸ்தானம் எழுந்தருளினார்.ஜீயர் ஸ்ரீ னிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.