ரிஷபம்: கொள்கை உறுதியுடன் செயல்படும் ரிஷபராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 01:03
தாராள பணவரவு: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆதாய ஸ்தானத்தில் உச்ச பலம் பெற்று அனுகூலம் வழங்கும் விதத்தில் செவ்வாய், புதனுடன் உள்ளார். புதன், ராகு, சனி ஆகிய மூவரும் வாழ்வை வளப்படுத்த தங்கள் பங்கிற்கு உதவுகின்றனர். சுக்கிரன், செவ்வாய் மீனத்தில் இருந்து சுக்கிர மங்கள யோக பலனைத் தருகின்றனர். இதனால் குடும்பத்தில் சுபநிகழ்வு நடந்தேறும். தாராள பணவரவால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் கவுரவம் கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் பாசத்துடன் நடந்து கொள்வர். புத்திரர்கள் திறமையுடன் செயல்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். ஆரோக்கியம் பலம் பெறும். உங்கள் வளர்ச்சி கண்டு எதிரிகள் கூட விலகிச் செல்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்பநலன் பேணிக் காத்திடுவர். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். அரசு சார்ந்த உதவிகள் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிப்பதோடு, சேமிக்கும் வகையில் வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து விடுவர். எதிர்பார்த்த சலுகைகள் படிப்படியாக கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் பாராட்டு காண்பர். குடும்பப்பெண்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். தாய்வீட்டாரின் அன்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில் நுட்பத்தால் உற்பத்தியை அதிகரித்து, ஆதாயம் காண்பர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் மக்கள்நலப்பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுவர். பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. விவசாயிகள் விளைபொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் லாபமுண்டு. மாணவர்கள் நன்கு படித்து கல்வியில் வளர்ச்சி அடைவர்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.
உஷார் நாள்: 1.4.13 இரவு 3.25 - 4.4.13 அதிகாலை 5.53 வெற்றி நாள்: மார்ச் 22, 23 நிறம்: சிமென்ட், பச்சை எண்: 4, 5
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »