மிதுனம்: வாழ்க்கையை ரசித்து வாழ்கின்ற மிதுனராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 01:03
சிக்கனம் அவசியம்: உங்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தில் அனுகூலக்குறைவாக உள்ளார். சூரியன், கேது மட்டுமே இந்த மாதம் நல்ல பலன்களை தருகின்றனர். எந்த செயலிலும் முன்யோசனையுடன் நடப்பதால் மட்டுமே தேவையற்ற சிரமம் எதிர்கொள்வதை தவிர்க்கலாம். சரியான நேரத்தில் சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வீட்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம். வாகன பயணத்தில் அறிமுகம் இல்லாத எவருக்கும் இடம்தருவது கூடாது. புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். அத்தியாவசிய செலவுக்கு சொத்து ஆவணத்தின் பேரில் கடன் பெறும்போது நம்பகமானவரிடம் வாங்குவது அவசியம். உடல்நிலை அதிருப்தி அளிக்கும். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நிர்பந்தம் உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழிலதிபர்கள் புதிய உத்திகள் மூலம் உற்பத்தி இலக்கை அடைய முயற்சிப்பர். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். லாபம் மிதமாக இருக்கும். வியாபாரிகள் லாபவிகிதம் குறைத்து போட்டியை சமாளிக்க வேண்டி வரும். வருமானம் ஓரளவு இருக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாக நேரிடும். பொறுப்புணர்வுடன் பணிபுரிவது நன்மை தரும். குடும்பப் பெண்கள் உறவினர் பற்றிய குறைகளை கணவரிடம் விமர்சிப்பது கூடாது. குடும்பச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் கடின உழைப்பினால் மட்டுமே லாபத்தை தக்க வைக்க இயலும். அரசியல்வாதிகள் பெற்ற நற்பெயருக்கு குறை நேராத விதத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். விவசாயிகள் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவர். கால்நடை வளர்ப்பில் கிடைக்கும் லாபம் குடும்பச் செலவுக்கு பயன்படும். மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெற்றோர் அறிவுரையை ஏற்பது அவசியம்.
பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
உஷார் நாள்: 4.4.13 அதிகாலை 5.54- 6.4.13 காலை 9.18 வெற்றி நாள்: மார்ச் 24, 25, 26 நிறம்: வாடாமல்லி, வெள்ளை எண்: 6, 8
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »