மதுரை லட்சுமிவராகர் கோயில் மார்ச்10ல் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2013 10:03
மதுரை: மதுரை அயிலாங்குடி, ஏ.பி. டவுன்ஷிப் லட்சுமிவராகர் கோயில் மண்டலாபிஷேக விழா மார்ச்10ல் நடக்கிறது. இரண்யாட்சன் என்னும் அசுரனிடமிருந்து பூமிதேவியைக் காத்தவர் வராகர். பன்றி முகத்துடன் இருக்கும் இவர், விஷ்ணுவின் தசாவதாரத்தில் மூன்றாமவர். சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து உலகைக் காப்பவர். அயிலாங்குடி ஏ.பி.டவுன்ஷிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள லட்சுமி வராகர் கோயில் மண்டலாபிஷேக பூஜை மார்ச் 10 காலை 9 முதல் மதியம் 12 வரை நடக்கிறது. இதில் விஷ்வக்சேனர் பூஜை, மகா சங்கல்பம், புருஷ சூக்தம், ஸ்ரீசூக்தம், லட்சுமி வராக காயத்ரி ஹோமம், அலங்கார திருமஞ்சனம் ஆகியவை நடக்கும். எஸ்.எஸ். காலனி நாராயணீய மண்டல குழுவினரின் நாராயணீயம் பாராயணம் இடம்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை மானேஜிங் டிரஸ்டி சேஷாத்ரி, ஸ்ரீனிவாசன் செய்துள்ளனர்.