பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், கடந்த மாதம், 16ம் தேதி துவங்கி, 26ம் தேதி நிறைவு பெற்றது. மறுநாள் காலை, விஸ்வரூப தரிசினம், இரவு விடையாற்றி உற்சவம் நடந்தது. அன்று முதல், தினமும், இரவு, உற்சவ காமாட்சியம்மன், ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விடையாற்றி உற்சவம் நிறைவு விழாவான, நேற்று முன்தினம் இரவு, புஷ்ப பல்லக்கு உற்சவம், கோலாகலமாக நடந்தது.