பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதமும், மாத பூஜைகளுக்காகவும், உற்சவங்களுக்காகவும் திறக்கப்படுவது, வழக்கம். பங்குனி மாத பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர உற்சவங்களுக்காக, கோவில் நடை, வரும், 14ம் தேதி, மாலை 5:30 மணிக்கு திறக்கப்படும்.மறுநாள் காலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 18ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பங்குனி உத்திர உற்சவ கொடியேற்றம் நடக்கிறது. மறுநாள் முதல், உத்திர உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்.உத்திர உற்சவத்தின் கடைசி நிகழ்ச்சியான, தீர்த்தவாரி, வரும், 27ம் தேதி நடைபெற்று, அன்றிரவு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல, மகரஜோதி உற்சவங்களுக்கு பின், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, 15 நாட்கள் வரை திறந்திருப்பது, உத்திர உற்சவத்தின் போதுதான்.