பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
நாமக்கல்: கடந்தப்பட்டி, முதல் உலகத்து ஆதிசிவனார் கோவிலில், நாளை (மார்ச் 10) இரவு, மகா சிவராத்திரி விழா, வெகுவிமரிசையாக நடக்கிறது. நாமக்கல் அடுத்த கடந்தப்பட்டியில், முதல் உலகத்து ஆதிசிவனார் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி அதர்வானவேத மாரியம்மன் ஸ்வாமியுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நாளை (மார்ச் 10) நடக்கிறது. அன்று இரவு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், ஆதிசிவனார், பக்தர்களுக்கு அருள்பாலிகிறார். அதை தொடர்ந்து, மறுநாள் (மார்ச் 11), 14ம் ஆண்டு விழா சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.