அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில் ஸ்ரீ உத்தண்டராயர் கோவில்களில், மகா சிவராத்திரி மற்றும் பொங்கல் விழா நாளை (10ம் தேதி) நடக்கிறது.அன்னூர் வட்டாரத்தில், அ.மேட்டுப்பாளையம், காளியாபுரம், அச்சம்பாளையம் ஆகிய மூன்று ஊர்களிலும் ஸ்ரீ உத்தண்டராயர் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் சிவராத்திரி விழா நடக்கிறது. நாளை அணி எடுக்க புறப்படுதல், மாலையில் அச்சம்பாளை யம் மற்றும் அ.மேட்டுப்பாளையத்திலும், இரவு காளியாபுரத்திலும் நடக்கிறது. இரவு அலங்கார, ஆராதனை, அபிஷேக பூஜை நடக்கிறது.11ம் தேதி காலை 9.00 மணிக்கு அச்சம்பாளையம், உத்தண்ட ராயர் கோவிலில், பொங்கல் ஊர்வலம் மற்றும் பொங்கல் வைத்தல் நடக்கிறது. மதியம் 12.00 மணிக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் மாவிளக்கு எடுத்தல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.