பதிவு செய்த நாள்
09
மார்
2013
11:03
கரூர்: கரூர் அருகே காந்திகிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில், வைகுண்டரின், 181வது ஜெயந்தி விழா நடந்தது. விழாவில், வைகுண்டரின் விழாவுக்கு, அரசு விடுமுறை அளித்த, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மணி, ஆறுமுகம், சண்முகநாதன், சீனி வாசன், சரவணன், சங்கரலிங்கம், முருகேசன், லதா, சந்திராவதி, பானுமதி, நிர்மலா உட்பட பலர் செய்திருந்தனர்.