ராஜபாளையம்: ராஜபாளையம் பெரியகடை பஜாரில் உள்ள ஸ்ரீஉமாமகேஸ்வர விநாயகர் கோயிலில், மாசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. விநாயகருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மழை வேண்டி கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. ஏற்பாடுகளை வெள்ளான்செட்டியார் சமூகம், மற்றும் வெள்ளான் செட்டியார் நண்பர்கள் சேவா சங்கம் செய்திருந்தன.