தேவகோட்டை: தேவகோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு , சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், கலங்காது கண்ட விநாயகர்கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இறவுசேரி மும்முடிநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், ஆதி சங்கரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் நான்கு கால சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. கூத்தாடி முத்துபெரியநாயகி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நான்கு கால பூஜைகள் நடந்தன.நேற்று காலை காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கும், வளாகத்தில் உள்ள கருப்பருக்கும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன.