திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் கீழையூர் அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை விழா நடந்தது. காலை 9.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரைமூலை இரட்டை வினாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து, கஞ்சுளி கபாளம் கையில் ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.மதியம் 12: 00 மணிக்கு சுவாõமி கோவிலை அடைந்தவுடன், மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு முத்துப்பள்ளக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.