பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பாளையம் நாகம்மாயம்மன் கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி, மயானக் கொள்ளை விழா நடந்தது. மகா சிவராத்திரி விழாவையொட்டி, அதிகாலை முதல் பூஜைகள், சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று காலை, 8 மணிக்கு சக்தி கரகம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு யாகாளி அழைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வல்லவராயன் வேடமணிந்து பூஜைகள் நடத்தி, மாயன கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (13ம் தேதி) சத்தாபரணம், அம்மன் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.