பதிவு செய்த நாள்
13
மார்
2013
10:03
ஊட்டி:ஊட்டி மாரியம்மன் கோயிலில் வரும் 22ம் தேதி தேர்த்திருவிழா துவங்குகிறது.ஊட்டி நகரின் மையப்பகுதியில் மார்க்கெட் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா ஒரு மாத காலம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு திருவிழா வரும் 22ம் தேதி கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜையுடன் துவங்குகிறது. 23ம் தேதி காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது.24ம் தேதி இரவு 10:00 மணிக்கு தேவாங்கர் சமூக இளைஞர் சங்கம் சார்பில், காப்பு கட்டுதல் நடக்கிறது. 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதி வரை அம்மன், பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வருகிறார். 25ல் ஆதிபராதி, 26ல் துர்கை, 27ல் பராதி, 28ல் காமாட்சியம்மன், 29ல் ஆதிபராதி, 30ம் தேதி ராஜராஜேஸ்வரி, 31ல் தேவி கருமாரியம்மன், ஏப்ரல் 1ல் மீனாட்சியம்மன், 2ல் சரஸ்வதி, 3ல் புவனேஸ்வரி, 4ல் அபிராமி சுந்தரி, 5ல் ராஜராஜேஸ்வரி, 6ல் மகாலட்சுமி, 7ல் மூகாம்பிகை, 8ல் ஹெத்தையம்மன், 9ல் வடிவாம்பிகை, 10ல் திரிசூலநாயகி, 11ல் திருவளர்நாயகி, 12ல் ராமலிங்க சவுடேஸ்வரி, 13ல் தையல்நாயகி, 14ல் மகாமாரி, 15ல் பகவதி அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.திருவிழா நாளான 16ம் தேதி காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் பட்டுபரிவட்டம் சார்த்துதல், காலை 8:30 மணிக்கு சிறப்பு கனகாபிஷேகம் நடக்கிறது. மதியம் 1:55 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பல இடங்களிலும் மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.17ல் நீலாம்பிகை அலங்காரத்தில் மஞ்சள் நீராட்டு விழா, 18ம் தேதி ஊஞ்சல் உற்சவம், கண்ணாடி பல்லக்கு, 19ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஆன்மிக அமைப்புகளை சேர்ந்தவர்கள், உபயதாரர்கள், இந்து அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.