ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விமானத்தில் தங்க தகடுகள் பதிக்கும் பணி, நேற்று துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமானம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஏற்கனவே இருந்த விமானம் இடிக்கப்பட்டு, சிற்பங்களுடன் புதிய விமானம் கட்டப்பட்டது. விமானத்தில் பொருத்துவதற்காக, செம்பால் செய்யப்பட்ட உருவ சிற்பங்கள் செய்யும் பணி முடிந்து, நேற்று முதல் சிற்பங்களில் தங்க தகடுகள் பொருத்தும் பணி துவங்கியது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கருடாழ்வார் சிலையில் தங்கதகடுகளை பதித்து துவக்கி வைத்தார். தக்கார் ரவிச்சந்திரன் ,"" இப்பணிக்கான 21கிலோ தங்கத்தை, இரண்டு வாரமாக தகடாக்கும் பணி நடந்தது. தற்போது சிற்பங்களில் ஒட்டும் பணி துவங்கியுள்ளது. இப்பணிக்காக தங்கத்தை வழங்கும் பக்தர்கள், நாச்சியார் டிரஸ்ட் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம், என்றார்