பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
சென்னை: தமிழகத்திலிருந்து, நடப்பாண்டில் ஹஜ் செல்ல விரும்புவோர், இம்மாதம், 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக ஹஜ் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஹஜ் நிர்வாகக் குழு அலுவகத்தில், விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். தீதீதீ.டச்டீஞிணிட்ட்டிttஞுஞு.ஞிணிட் என்ற இணையதளத்தில் இருந்தும், விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இம்மாதம், 20ம் தேதிக்குள், ஹஜ் குழுவிடம் அளிக்க வேண்டும். எண்.13, ரோசி டவர், மூன்றாம் தளம், மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34 என்ற முகவரியில், ஹஜ் நிர்வாகக் குழு செயல்படுகிறது. இந்திய ஹஜ் குழு மூலம், ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்கள் மட்டுமே, தமிழக ஹஜ் குழு மூலம், ஹஜ் பயணம் செல்ல தகுதியுடைவர்கள். மேலும், விவரங்களுக்கு, தமிழக ஹஜ் நிர்வாகக் குழுவை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.