பழநி: பழநி மாரியம்மன் கோயில், மாசித்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடந்தது. பழநி தேவஸ்தான உபகோயிலான, மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா, பிப்.,22 ல் முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் விழா துவங்கி, 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை, தேரடி தேர்நிலையிலிருந்து,மாலை 4.45 மணிக்கு தேரோட்டம் ஆரம்பம் ஆனது. தேரின் மீது பழங்களையும், நவ தானியங்களையும் பக்தர்கள் வீசினர். நான்கு ரத வீதிகளில் தேர் வடம் பிடித்தல் நடந்தது. மாலை 5.45 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.