பல்லாவரம்:பல்லாவரம் தேவி கெங்கையம்மன் கோவிலை அறநிலைய துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்லாவரம், தர்கா சாலையில் உள்ள மலங்கானந்தபுரத்தில் தேவி கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக அறங்காவலராக உள்ளார். கோவில் பராமரிப்பு குறித்த தகராறில் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பிறகு கோவில் நிர்வாகத்தை அறநிலைய துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது. இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு கொடுக்கப்பட்டது.