பதிவு செய்த நாள்
14
மார்
2013
11:03
கும்பகோணம்: திருபுவனம் கம்பகரேஸ்வர ஸ்வாமி கோயிலில், உருத்திரபாத திருநாள், 16ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் துவங்குகிறது. தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும், பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழா புகழ் பெற்றதாகும். இக்கோயிலில் சரபமூர்த்தி எழுந்தருளி தனிக்கோயில் கொண்டிருப்பது சிறப்பம்சமாகும். வரும், 16ம் தேதி இரவு, 8 மணிக்கு மேல் பூர்வாங்க பூஜைகள் செய்யப்படுகிறது. மறுநாள், 17ம் தேதி காலை, 10 மணிக்கு மேல், 11.15க்குள், கோயில் கொடி மரத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து, 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஒரு வாரத்துக்கு தினமும் காலை, மாலை நேரங்களில், பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் சிறப்பம்சமாக, 21ம் தேதி ரிஷப வாகனத்தில், ஸ்வாமி சகோபுர தரிசனமும், 23ம் தேதி திருக்கல்யாண வைபவமும், 25ம் தேதி திருத்தேரோட்டமும், 26ம் தேதி காவிரியில் தீர்த்தவாரி வைபவமும், 31ம் தேதி சரபேஸ்வர ஸ்வாமிக்கு ஏகதின உற்சவமாக, கோடி அர்ச்சனை, இரவு வெள்ளி ரத ஊர்வலமும் நடக்கிறது.