பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
காயல்பட்டணம்: காயல்பட்டணம் அருகேயுள்ள பூமீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.காயல்பட்டணம் அருகேயுள்ள பூமீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி விழா வழிபாடுகள் நடந்தது. விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சிவராத்திரி வழிபாடுகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஆன்மீக அறிஞர்கள் ஜானகிஅம்மாள், குமரகுரு ஆகியோரின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் நெப்போலியன், பொது துணை செயலாளர் உஜ்ஜல்சிங், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜோதிராதாகிருஷ்ணன், பொருளாளர் அன்னத்தாய், நகர செயலாளர் சின்னத்துரை, கட்டபொம்மன்நாயக்கர், பேரவை மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் அரசமுத்து, துணைசெயலாளர் செந்தில், கோயில் நிர்வாகிகள் ராமச்சந்திரன், சோமசுந்தரம், முருகையா, ஜனார்த்தனம், செந்தூர்பாண்டியன், நாராயணன், முனீஸ்வரன் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் ராமநாதன், செயலாளர் முருகன், பொருளாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.