பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
ஊட்டி: ஊட்டி காந்தல் மேல் போகி தெரு பால்காட்டேரி அம்மன் கோவிலில்,நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடந்தது. கும்பாபிஷேக விழாவில், கடந்த 13ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்ஹனம், ரக்ஷாபந்தனம், முதற்காலயாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை 7:30 மணி முதல் மகா பூர்ணாகுதி, தீபாராதனை, விமானம் மற்றும் மூலாலய மகா கும்பாபிஷேகம், தச தரிசனம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.