திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயலின் உப கோயிலான குருநாதன் கோயிலில், பாரி வேட்டை திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன் போன்ற சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பின்,வேட்டை சாத்துத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து குருநதான் கோயிலுக்கு பூஜைபொட்ருட்கள், பூ சப்பரம் கொண்டு செல்லப்பட்டது.