பதிவு செய்த நாள்
18
மார்
2013
10:03
புதுச்சேரி: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சேவா சங்கத்தின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நேற்று வேதபுரீஸ்வரர் கோவில் தேவஸ் தான மண்டபத்தில் நடந்தது. புதுச்சேரி அர்த்தனாரி குருக்கள் வரவேற்றார். அமைப்பு செயலாளர் ராஜாசுவாமிநாத குருக்கள் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரிய சேவா சங்க தலைவர் சோமசுந்தர தீக்ஷித் தலைமை தாங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதில் தலைவராக கணேஷ் குருக்கள், துணைத் தலைவர்களாக வெங்கடேச குருக்கள், திருஞான சம்பந்தம் குருக்கள், பொதுச்செயலாளராக பிரகாஷ் குருக்கள், இணை செயலாளராக சபரிகிரீச குருக்கள், சங்க ஆலோசகராக அய்யாசாமி குருக்கள், துணை செயலாளராக பாபு குருக்கள், கொள்கை பரப்பு செயலாளராக அர்த்தனாரி குருக்கள், பொரு ளாளராக கார்த்திகேயன் குருக்கள், நிதி ஆலோசகராக ரமேஷ் குருக்கள், சங்க ஒருங்கிணைப்பாளராக ரத்தினசபாபதி குருக்கள், சங்க ஆலோசகராக நடராஜ குருக்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் செயற் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சர் ராஜவேலு பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். உயர்மட்ட ஆட்சி மன்றக்குழு தலைவர் சிவசங்கர சர்மா, தமிழ்மாநில அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரிய சேவா சங்க தலைவர் சண்முகசுந்தர பட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதுச்சேரி சேவா சங்க தலைவர் கணேச குருக்கள் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை செல்வகுமர தேவநாத குருக்கள் தொகுத்து வழங்கினார். புதுச்சேரி சேவா சங்க பொதுச் செயலாளர் பிரகாஷ் குருக்கள் நன்றி கூறினார்.