நகரி: திருப்பதி மலையின் கீழே உள்ள, அலிப்பிரி என்ற இடத்திலிருந்து, மலை மேலே செல்ல நடைபாதை உள்ளது. பக்தர்கள் பாத யாத்திரையாக செல்லும் இவ்வழியில் தண்ணீர், தின்பண்டங்கள் விற்கும் கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்துள்ள பெரும்பாலானோர், தேவஸ்தான அனுமதியை பெறாமல் உள்ளனர். இதையடுத்து, தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம், இப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, காலாவதியான பொருட்கள் பல, விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அப் பொருட்கள், உடனே அழிக்கப்பட்டன.