பதிவு செய்த நாள்
18
மார்
2013
11:03
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கடம்பத்தூர் அடுத்த, பேரம்பாக்கத்தில் காமாட்சி அம்மன் உடனுறை சோளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான, பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்களுக்கு, உற்சவர் தினமும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவார். பூத வாகனம், நந்தி, நாகம் மற்றும் யானை ஆகிய வாகனங்களில் ஒவ்வொரு நாளும், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். வரும், 24ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.