திருப்போரூர்: திருப்போரூரில் கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகையையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பிரார்த்தனையாக சரவணப்பொய்கையில் நீராடி நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை செய்து கந்தனை வழிபட்டனர். காவடி ஊர்வலமும் நடந்தது. விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.நேற்று, கிருத்திகையும், சஷ்டியும் இணைந்து வந்ததால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு காது குத்தினர்.