பிறக்கும் நேரத்தைக் கணித்து எழுதுவது தான் சுயஜாதகம். ஒருவர் பிறந்த அன்று, வான மண்டலத்தில் கிரகங்கள் இருந்த நிலையை ஒருவரின் சுயஜாதகம் காட்டுகிறது. இதன்மூலம் அவர் வாழ்வில் நடைபெறப் போகும் நன்மை, தீமைகளை தெரிந்து கொள்ளமுடியும். நன்மை தரும் யோகதிசையில் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், தீமையான காலகட்டங்களில் நிதானமாகச் செயல்படவும் ஜோதிடம் நமக்கு வழிகாட்டி உதவுகிறது. ஜோதிடக்கலைக்கும் மூடநம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை. அதை அறிவுசார்ந்த கலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.