கிருமாம்பாக்கம்: பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கரகம் வீதியுலா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு நடந்த சிறப்பு பூஜையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இரவு 12 மணிக்கு ரணகளிப்பு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை, தேர் திருவிழா நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளை, தேர் வீதியுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை பூராணாங்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.