பதிவு செய்த நாள்
20
மார்
2013
10:03
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், புஷ்கரணியிலுள்ள பாஸ்கரேஸ்வரர் ஸ்வாமி கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 10:15 மணிக்கு, கும்பாபிஷேக விழா துவங்கியது. இதில், கோபுர கலசத்துக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றி, சிறப்பு பூஜை செய்தனர். இதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இவ்விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கோவிலில், சிறப்பு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., காமராஜ், முன்னாள் மயிலாடுதுறை எம்.பி., ராஜேந்திரன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.