பழநி மாரியம்மன் கோயில் விழா: 1008 குடங்களில் பால் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2013 10:03
பழநி: பழநி தேவஸ்தான உபகோயிலான மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி அன்னாபிஷேகம், உற்சவசாந்தி விழா நடந்தது. பழநி, வ.உ.சி.மன்ற தலைமையகம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து பால்குடங்கள், புறப்பட்ட, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன் கோயிலை அடைந்து உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் செய்யப்பட்ட அன்னபூரணி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்தனாதன் சிவனேசன் தலைமைவகித்தார். ஆலோசனை குழு தலைவர் பெருமாள் முன்னிலைவகித்தார்.64 ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் சார்பில், உற்சவ சாந்தி விழா நடந்தது. சண்முகநதியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் நிறுவனத்தார், வ.உ.சி.மன்ற தலைமையகத்தினர், கொங்கு பேரவையினர் செய்திருந்தனர்.