பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று காலை பூத வாகன உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இன்று காலை நாகன வாகனம், இரவு வெள்ளி இடப வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோற்சவம், பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழாவாக, ஆண்டுதோறும் பங்குனி மாதம் கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டு விழா, கடந்த 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்றாம் நாள் திருவிழாவான, நேற்று காலை பூத வாகனம் உற்சவம் நடந்தது.இரவு சுவாமி, அம்பிகை, சண்டிகேஸ்வரர், ஆகியோர் பவழக்கால் சப்பரங்களிலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் தங்க மயில் வாகனத்திலும், சின்னகாஞ்சிபுரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நான்காம் நாளான இன்று காலை நாகன வாகனம் உற்சவம், இரவு பிரபல உற்சவமான வெள்ளி இடப வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.