மயிலம்: மயிலம் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது. மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வரும் மார்ச் 26ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், மகா தீபாரதனை நடந்தது. தொடர்ந்து 6.40 மணிக்கு மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். முற்பகல் 11 மணிக்கு வெள்ளி விமான உற்சவம், இரவு விநாயகர் வழிபாடும் நடந்தது. இரவு 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மேற்பார்வையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.