பதிவு செய்த நாள்
20
மார்
2013
11:03
ஓசூர்: ஓசூர், நெசவுத் தெருவில் பார்வதி -அம்பிகை சமேத சோமேஸ்வரர் ஸ்வாமி கோவில் உள்ளது. நூறு ஆண்டு பழமையான இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 15ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நவகிரக ஹோமம், மகா பூர்ணஹூதி, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தம், நான்காம் கால பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. மகா கும்பாபிஷேகத்தை சென்னை போளூர் கிருத்திஹானந்த சிவாச்சாரியார், பாலசந்திரசேகர் சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், மகாதீபராதனை பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. விநாயகர் பெருமான், சோமேஸ்வரர், பார்வதி அம்மன், முருகன் ஆகிய ஸ்வாமிகளுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவில், நகராட்சி சேர்மன் பாலகிருஷ்ணரெட்டி, துணைத்தலைவர் ராமு, ஓசூர் நகர செயலாளர் விஜயகுமார், கவுன்சிலர்கள் நந்தகுமார், பாரதிகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.