நான் இறைவனை நம்புபவன். அவன் தரும் சோதனைகளையும், கிரகங்கள் தரும் சோதனைகளையும் ஏற்றுக் கொள்கிறேன். அவன் தரும் அடி வலிக்கத்தான் செய்கிறது. இருப்பினும், முற்பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ! இப்பிறப்பில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்கள் என்னென்னவோ! அதற்கெல்லாம் பரிகாரமும் அவனே என்று அவன் திருநாமத்தை மட்டும் தவறாமல் சொல்லி வருகிறேன். கீதையில் பகவான் சொல்வது போல, எல்லா செயல்களுக்கும் காரணம் அவனே! அதை உணர்ந்து, பாவச்செயல்களுக்குள் என்னை தள்ளிவிடாதே இறைவா என பிரார்த்தித்து வருகிறேன்.