பெரிய நாகபூண்டி: நாகேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த ராகு கால பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது, பெரிய நாகபூண்டியில் உள்ள நாகேஸ்வர சுவாமி கோவில். இது, ராகு, கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது. வாரந்தோறும், வெள்ளிக்கிழமை காலை, 10:30 மணி முதல், 12:00 மணி வரை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.நேற்று நடந்த ராகு கால பூஜைக்கு அம்மையார்குப்பம், வீரமங்கலம், நாகபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மதியம் நித்திய அன்னதானம் நடந்தது.