தென்காசி : தென்காசி பூமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. தென்காசி செங்கோட்டை ரோட்டில் மருத்துவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட பூமாரியம்மன், பேச்சியம்மன் , கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 12வது ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. காலை கணபதி ஹோமம், மதியம் நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை சமுதாயத் தலைவர் செண்பகம், ராஜாமுருகன், நவநீதகிருஷ்ணன், கண்ணன், சேகர், துரை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.