சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் 26ம் தேதி பங்குனி உத்திர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2013 10:03
ஆழ்வார்குறிச்சி: கடையம் சூட்சமுடையார் சாஸ்தா கோயிலில் 26ம்தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. கடையத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் சூட்சமுடையார் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, பூரணவல்லி, புஷ்பவல்லி மற்றும் பரிவார தேவதைகள் எழுந்தருளியுள்ளனர். பங்குனி உத்திர நாளான வரும் 26ம்தேதி காலை 6 மணியளவில் தலையணை சாஸ்தா கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், 7 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு பால்குடமும், பகல் 12 மணிக்கு சாஸ்தா சிறப்பு அலங்காரத்தில் காட்சிஅளித்தலும், விசேஷ தீபாராதனையும் நடக்கிறது. பாளை. ராஜம் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும், மதியம் 1மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு வாகைக்குளம் இந்திராணி குழுவினரின் வில்லிசை ,மற்றும் நையாண்டிமேள கச்சேரியும், இரவு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துவருகின்றனர். விழாவில் வரிதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டுமென நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.