பதிவு செய்த நாள்
25
மார்
2013
11:03
திருப்போரூர்: காட்டூர், உத்திரவைத்தீஸ்வரர் கோவிலில், 26ம் தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடைபெற உள்ளது. திருப்போரூர் அடுத்த காட்டூரில், தையல்நாயகி சமேத உத்திரவைத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம் என்ற சிறப்பு பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான விழா, நாளை, வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி, நாளை காலை, 6:00 மணிக்கு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் காலை, 8:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகமும் காலை, 11:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு, அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு, குத்துவிளக்கு பூஜையும் நடக்கிறது. மறைமலை நகர் பேரமனூரில், ராஜராஜசோழனால் வழிபாடு செய்யப்பட்ட திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நான்காம் ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நாளை மாலை, 6:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், அதை தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு, தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.திருப்போரூர் கந்தசுவாமி கோவில், கொளத்தூர் ரங்கநாயகி சமேத கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மேலையூர் நாகபாணீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் நாளை, பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது.