பதிவு செய்த நாள்
28
மார்
2013
02:03
உன்னைவிட அனைத்து வழிகளிலும் உயர்ந்தவர்களுக்கு யோசனையோ, அறிவுரையோ வழங்குவதைத் தவிர்த்து விடு. அவ்வாறு செய்தால், அகங்காரக்காரர்கள் வரிசையில் சேர்ந்து விடுவாய். வாழும் முறையை அறிந்து கொண்டு, அதன்படி நடந்தால் வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல சிறப்புகளை அடைய முடியும். நம்முடைய இறைவன் நமது அருகிலேயே உள்ளான், அவனைக் காண்பதற்காக நாம் பனைமரம் ஏறத் தேவையில்லை.
எளியவர்களாக இருக்கும் போதும், உலக நடைமுறைக்கு நேர் எதிராக இருக்கும் போதும், உலக ஆற்றல் நம்மை அமுக்கவே செய்கிறது. இதனால் வாழ்க்கையில் புகழ் கிடைத்தவுடன், அனைவரோடும் இணைந்து பணியாற்றினால் நமக்கு பல்வேறு வகையிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நல்லவற்றைத் தேர்வு செய்து முழுவலிமையையும் ஒன்று திரட்டி மகிழ்ச்சியோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பிறரோடு நம்மை இணைத்துக் கொள்வதன் மூலமாக, நம்மை நாமே உணர்ந்து கொள்ளும் நிலையை புரிந்து கொள்ள முடியும்.
நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், உலக மனப்போக்கின் ஆளுமைக்குத் தனிப்பட்ட முறையில் நாம் தலை வணங்கியே ஆக வேண்டும். குறையாய் இருக்கும் ஒன்றின் அன்பைப்பெற நிறைவாகவுள்ள ஒன்று அழகை அணிகலனாக அணிந்து இருக்கிறது. மனிதன் செய்யக்கூடிய செயல்களால் இறைவன் ஒரு போதும் மனம் நொந்து போவதில்லை. இதனை சிறு குழந்தை கூட மனதளவில் அறிந்து உள்ளது.
மனிதனுடைய சிந்தனைகளே பேச்சாக உருப்பெறுகிறது. இது இறை அமைதியினால் மட்டுமே முடிகிறது. இறைவன் பெரிய அரசாங்கங்களை வெறுத்து ஒதுக்குகிறான். ஆனால், சின்னஞ் சிறிய மலர்களை ஒரு போதும் வெறுப்பது கிடையாது. கர்வத்தினால் ஒரு மனிதன் கற்களின் அடியில் புதைந்து போய்விடுகிறான். ஆனால், அன்பினால், பிறரிடம் பணிவாக நடந்து கொள்வதினால் மேன்மையை அடைகிறான். பணிகளினால் நமக்கு இடையூறு ஏற்படுமானால், நமது மனம் நிச்சயமாக திடத்தன்மை அடையும்.
பக்தி உள்ளவர்கள் தம்மால் எட்டக்கூடியதை தனது ஆர்வம் மூலம் எட்டுகின்றனர். ஆனால், சாதாரண மனம் கொண்ட மனிதர்களோ எட்ட முடியாததையே எட்டிவிடத் துடிக்கின்றனர். அன்பினால் நமக்கு முழுமையான மதிப்பு கிடைக்கிறது. அப்படி கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் வரையில் நிச்சயமாக காத்துக் கொண்டிருக்க வேண்டும். நல்லது செய்ய விரும்புகிறவன், எப்போதும் பிறரது வாயிற் கதவுகளை தட்டுகிறான். ஆனால், அன்பு செலுத்துபவனுடைய வீடுகளில் வாயில் கதவு நிச்சயமாகத் திறந்தே உள்ளது.