நாசரேத்: வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டு சாமிதரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை ஹோட்டல் சரவணபவன் நிறுவனரும், வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் நிர்வாக கைங்கர்யதாரருமான ராஜகோபால் தலைமையில் கோயில் மேலாளர் வசந்தன், பண்ணைமேலாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.