பழமாபுரம் பகவதியம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2013 10:04
க.பரமத்தி: பழமாபுரம் பகவதியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸவாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகில் உள்ள பழமாபுரத்தில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் திருவிழா காப்புகட்டும் நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து தினசரி அபிஷேக பூஜைகள் நடந்து வந்தன. கடந்த இரு நாட்களுக்கு முன் கரகம்பாலித்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இரவு மாவிளக்கு பூஜை நடந்தது. கடந்த 25ம்தேதி தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அக்னிசட்டி எடுத்தல், அழகு குத்துதல் நிகழ்ச்சி நடந்துது. பின் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், தலைவாசல் வழியாக கோவிலைச் சென்றடைந்தது. இரவு கரகம் எடுத்து செல்லப்பட்டு கிணற்றில் விட்டதுடன் விழா முடிவடைந்தது.ஏற்பாடுகளை தர்மகர்த்தா தங்கராஜ் மற்றும் ஊர்பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.