மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள பிரசித்திபெற்ற அங்கா ளம்மன் கோவில் திரு விழா கடந்த மாதம் 22 ம் தேதி துவங்கியது. தினசரி அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அங் காளம்மன் தேரோட்டம் நடந்தது. அனுமந்தை முக்கிய வீதிகளின் வழி யாக வந்து மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந் தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று இரவு அங் காளம்மன் அலங் காரத்துடன் வீதியுலா சென்று தெப்பல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடு களை கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ரா÷ஐந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.