திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர குருபூøஜையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி சைவசிந்தாந்த பேரவை சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.விழாவையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 11 மணிக்கு 50க்கும் மேற்பட்டோர் திருவாசக பாடல்களை பாடினர். மதியம் 1 மணிக்கு மகேசுவரபூஜை நடந்தது. ஏற்பாடுகளை அம்பலவாணத்தம் பிரான் சுவாமிகள், பேரவை நிர்வாகிகள் தமிழகன், வேங்கடாசலம், வேலாயுதம், தேவராஜன் செய்திருந்தனர்.