காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பங்குனி பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், குறிப்பிடத்தக்கது யதோக்தகாரி பெருமாள் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. உற்சவத்தின் துவக்கமாக, நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் நடந்தது. நேற்று பகல் 2:00 மணிக்கு ஸ்ரீ ஆழ்வார் திருமஞ்சனம், மாலை ஸ்ரீ சேனை முதன்மையார் புறப்பாடு நடந்தது. இன்று காலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள், கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சப்பரத்தில் பெருமாள் வீதியுலா நடைபெறும். மாலை 3:00 மணிக்கு பேரீதாடனம், 6:00 மணிக்கு சிம்மவாகனம் உற்சவம் நடைபெறும்.