பதிவு செய்த நாள்
02
ஏப்
2013
11:04
ராஜபாளையம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. அறநிலையத்துறை கோயிலான இங்கு, தனியார் உபயதாரர்கள் மூலம் திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். தற்போது, அறநிலையத்துறை கோயில்களில் திருவிளக்கு பூஜையை, நிர்வாகமே நடத்தவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, தமிழ் புத்தாண்டான சித்திரை 1 (ஏப்.14)ல் மாயூரநாத சுவாமி கோயில் நிர்வாகமே திருவிளக்கு பூஜை நடத்த உள்ளது. அன்று, மாலை 6 மணிக்கு துவங்க உள்ள விழாவில், நால்வர் துதி, விநாயகர் துதி, அபிராமி அந்தாதி, திருப்புகழ் போன்ற பாடல்கள் பாடப்படும். விளக்கு பூஜை அனுமதி கட்டணம் 150 ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை, 600 டோக்கன் விற்பனை ஆகி உள்ளது. இதில் கலந்துகெள்ள விரும்பும் பக்தர்கள், கோயில் நிர்வாக அலுவலகத்தை அனுகலாம் என, அதிகாரி வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.