காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பிரம்மோற்சவம் கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சப்பரம், இரவு சிம்ம வாகனம் உற்சவம் நடந்தது. இரண்டாம் நாள் திருவிழாவான நேற்று காலை, ஹம்ஸ வாகனம், இரவு சூர்யபிரபை உற்சவம் நடந்தது. இன்று காலை கருட சேவை நடைபெற உள்ளது. காலை 6:00 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, வரதராஜப் பெருமாள் கோவில் மாட வீதிகளை வலம் வருவார். மாலை ஹனுமந்த வாகனம் உற்சவம் நடைபெற உள்ளது.